Friday, September 16, 2005

என் மனைவி..நீ..


என் மனைவி..நீ..

காலமதை இனிமையாக்கி

நேற்ருவரை காத்திருந்து
இனிமைகள் மறைந்து
போனதால்
உன் காதல் கானல்
நீராய் போனதடி..
எமை பிரித்த தூரம்
விலகி..பிரிவை தந்தது
கனவுகள் தீயாய்
எரிகின்றது
நீ..சொன்ன வார்த்தைகள்
என் மனதில் ஆறுதல்
கொண்டது
நீ..பிரிந்து போனதும்
என் கவிதை இழந்து
போனது
புலம்பிப் புலம்பிஎனி
என்ன லாபம்
நகத்துடன் சதையாய்
இனைந்து விட்டோம்
உயிரோடு உயிராய்
கலந்து விட்டோம்
என்றாய்
அப்போது கேட்டிருக்கவேண்டும்
நான்......
தூரம் நம்மை பிரிக்காதா..
என்று
ஏன் பிரிந்தாய் நீ......
ஏன் தவிக்கவிட்டாய்
காதலியே...
இனிமை இல்லைவாழ்வில்
வசந்தம்இல்லை..
கனவு இல்லை
எனக்கு யாரும்
இல்லை
இருவரின் மனதில்
எத்தனை..இடர்பாடுகள்
பரிதாபமாக...விடைகான
துடிக்குது என் மனது.
நீ...என்மனைவியாகும்
வரை.
என்றும் தனிமையாய்
இருப்பேன்..


2 comments:

Balamurali said...

நல்ல நடையில் அமைந்திருக்கின்றது இந்தக் கவிதை!

rahini said...

நீங்கள் கவிதைக்குயில் தான் என்பதில் சந்தேகமில்லை.
கவிதைக்காட்டில் குயிலின் கவிதை கேட்க வந்த என் காதுகள் (கவிதைவேடன்கள்) கொண்டுவந்த கவிதை என் புரிதலுக்கு கொண்டுவந்தால் பாராடி மகிழ்வேன்.

வாழ்க நீங்கள்
வாழ்க உங்கள் கவிதைகள்.

நெஞ்சார்ந்த பாசமுடன்
என் சுரேஷ்