
என்னவள்
பொற்கால மேடையில் சேர்ந்த
நம் காதல்
நிலையாகும் என்று அழியாத
ஓவியமாக.....
என்மனதில் பதித்தேன்
அறியாத உன்...மனதை
தொட்டுச்சென்றதால்
உன் இதயம் திறவாமல்
எங்கே சென்றாய்
பொல்லாத பருவத்தை
கல்லாக்கி வைத்தேன்
எனை விட்டு வெகு
தூரம் சென்றவளே
உன் நினைவை சுமந்படி
தினம் குளிக்கின்றேன்
கண்ணீரால்
உன் உருவம் எனை
தட்டிச்செல்ல
ஆறாதறணமாக என் இதையம்
வலிக்கின்றது
என்னுள் புகுந்து என்
சுவாசத்தை அடைத்தாய்
என் பேச்சில் உன்
சத்தம் கேட்கின்றேன்
என் பார்வையில்
உனை கான்கின்றேன்
என்னுள் எல்லாம்
நீயாக வருவதால்
நான் நனாக இல்லையடி
உன் நினைவை சுமக்க
என் உடல் வேண்டும்
கல்லறையில் புகுமுன்
என் அருகில் வந்திடு
- ராகினி
2 comments:
ஒரு உண்மை காதலனின்
உண்மை நிலையை விளக்கும் கவிதை வரிகள் அருமை!
ஒரு உண்மை காதலனின்உண்மை நிலையை விளக்கும் கவிதை வரி... (nagai.s.balamurali) 25.05.07
nanri murali
Post a Comment