
ஏன் அழைத்தாய் எனை
ஏன் பறித்தாய் மனதை
பூமி எங்கும் பூத்தூவ
பூமகளாய் வந்தாய்
பூ.....வாக தூங்கிய விழியின் தூக்கத்தை
திருடினாய். பெண்ணே....
இதமான இரவை பகல் போல்விழித்திருந்து
நீ...தூக்கம் கொள்ளும் வரை
என் விழிதூங்க மறுக்கின்றது
நீ... கவிதையா.. இல்லை காவியமா..
நரி இல்லை நீ எனக்கு
நாயகி...நாகமில்லை நீ.. எனக்கு
நாதமானவள்வேதமானவளும்.
போர் செய்யும் வாழ்க்கைக்குள்
போர்வையாக நான் வருவேன்
போர் தொடுக்க வில்லை
போர் தடுக்க..
.உன் வாழ்க்கையில் இன்ப ஒளியாக்க
உன் பாதையில் பூவாக மலர்வேன்
வாழ்க்கை ஆயிரம் அர்த்தம் சொல்லும்
நீ... அழிக்க முடியாத ஏட்டில்
அர்த்தமாக வாழ வேண்டும்
வானம் பூத்தூவ....
தேவதைகள் ஆசீர்வதிக்க
உன் மனச்சாந்தியுடன் இன்பமாக வாழ
எங்கிருந்தோ... நீ....அழைத்தாய்
இன்பமாக என்றும் உன்னுடன் நான்....
No comments:
Post a Comment