Friday, September 09, 2005

தாயின் மௌனம்...

தாயின் மௌனம்...

வாழ்க்கை என்னும் ஓடத்தில்
எத்தனை மாற்றங்கள்

பாசத்தில் ஆனந்தம்.
பார்வையில் பாதாளம்.

சொந்தம் என்றாள் என்னவெண்றான்.
ஒருகனம் திக்கெண்றது.
மறுகனம் மௌனமானது

.வந்தவள் வசமாக்கினாள்
பெற்றவள் தடுமாறினாள்

கொண்டவள் வார்த்தையால்

பாசக்கூடும் உடைந்தது

புகுந்த இடத்தை நசுக்கிவிட்டு

பிறந்த இடத்தை வழமாக்கினாள்.

மகனை பெற்றவள் பட்டினியால்

பரிதவித்தாள்.

தான் என்ற அகந்தை அவள்

மனதில் ஆடியதால்
பாசத்தின் உணர்வை அவள்....

கான மறுத்தாள்.

ஆட்டிவைத்தவளின் கையில்

ஆடுபவன் உறங்கிவிட்டான்.

புலம் பெயர்ந்ததால் உலகை

மறந்து விட்டாய்.

அரக்கத்தனம் படைத்த உன் இதயத்தை..
.ஒரு கனம் அன்பால் நிறப்பிவிடு.

இல்லை.ஒடுங்கிவிடு.

வெறித்தனம் கொண்டு

ஆட்டிவைக்காதே.

உறவெண்ற பாசத்தில் நீ......இறங்கிவிடு.
உன் இதயம் மலர்வாய்.

1 comment:

rahini said...

அன்புள்ள ராகினி அவர்களுக்கு...

தங்கள் கவிதைகள்...தங்கத் தமிழில்...சிங்கார நடையில்...திங்கள் ஒளி வீசுகின்றன.

காதல், அன்பு, பாசம், மானுட நேயம், பக்தி,சமூக விழிப்புனர்வு....என அதனை விஷயங்களையும்...
சத்தியப் பார்வையுடனும்...
சின்ன வரிகளால் சிகரம் தொடும் எளிமையுடனும் எழுதிய தங்கள் முத்திரைப் படைப்பாற்றல்
என்னை விழி உயர்த்தி வியக்க வைக்கிறது.
வாழ்த்தி வணங்க வைக்கிறது.

அவசர வாழ்வின் இயந்திர சிறைக்குள் சிக்கியிருக்கும் மனிதனை....
விடுவிக்கக் கூடிய 'தன்னம்பிக்க தீபம்' ஏந்தும் கவிதைகளையும் இன்னும் அதிகமாக தாங்கள் படைக்க வேன்டும் என்பது என் பணிவான வேண்டுகோள்...

அன்புடன்
யாழ் சுதாகர்
சென்னை - 87