Saturday, September 10, 2005
உன் கையால்..
உன் கையால்..
யன்னல் திறக்கையில்
வீசுது உன் காதல்.
அதில் வாட்டுது உன்
நினைவு.
நினைவை மனதில் வைத்து
என்குள் ஓர் கனவை வளர்த்தேன்
கவிதை ஒன்று தொடுத்து
கடிதமாக வரைந்தேன்.
வீடெல்லாம் விளக்கேற்றி
விடியலுக்காய் காத்திருந்தேன்.
காத்திருந்த கண்ணில்
காணல் நீர்..ஊற்றிவிட்டாய்.
கள்ளமில்லா நெஞ்சை
களவாடிச்சென்று ….
எனைகள்ளடிக்க வைத்து
விட்டாய்.
காத்திருந்த மனதை துடிக்க
வைத்தராட்சசி..... யே...
நொடிப்பொழுதில் கூடுதடி
என் நாடித்துடிப்பு.
வார்த்தைகள் கொட்டிவிட
துடிக்குது மனது.
கள்ளடித்த கால்கள்
தள்ளாடிதடுக்குதடி.
புரியாத புதிராய் புகுந்து
விட்டராட்சசியே...
பித்தனாக்கி எனை செத்தவன்
போல் அலையவைத்தாய்
தொண்டைக்குழி வறண்டு
நாவு புறழுதடி.
என் அன்பே....உன் கையால்
கள்....கஞ்சி தந்தாலும்
கல்..கற்கண்டு போல்
இனிக்குமடி...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment