நாயகன்
உன்னை அறிந்தேன் என்னைத் தந்தேன்
கண்கள் திறந்தேன்
மங்காத உன்உருவம்
சிங்காரரூபம் கொண்டு என் முன்வந்ததால்
உலகை மறந்து உனை நாயகனாக்கினேன்.
சங்கமப்பாதையில் கால்பதித்ததால்
எனை குங்குமச்சிமிழாக்கினாய்
எனக்கு நீ..நிரந்தரமாகி
இன்ப ஊற்றாகஉறவை வளர்து
உயிரைக்கொடுத்தாய்
தேடியபார்வை தேனாக வந்ததாள்....
உயிருக்குள் உயிராக உனை அடைத்தேன்
இமையாக நீ....இருக்க என் கண்ணுக்கு பயமேது
காலமுலுவதும் உன்னுள் வாழ்ந்து பூவோடுசென்றாலும்
மீண்டும் உனையே என்நாயகனாக்குவேன்.
Friday, September 09, 2005
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment