
நெஞ்சைத் தொட்ட காற்றே
வீச மறுத்தது ஏனோ.
.ஒரு கணம் உனை தந்தை போல் பார்ப்பேன்
மறு கணம் உனை நண்பனாக்குவேன்
உன் பாசத்தை மட்டும் பரிசாய்க் கேட்டேன்
ஊருக்குப் பயந்து நீ.. ஊமையானாய்
நல் வாழ்த்தும் கூறவில்லை
நலம் பெறவும் பிரார்த்தனை இல்லை
என் தோழி எடுத்துரைத்தும்
உன் செவி கேட்கவில்லை
அறியாத போதும் தந்தையாய் நீ இருந்து
நான்கு போர் சுமக்கையில்
ஒரு பக்கம் சுமந்திடு
No comments:
Post a Comment