
புயலில் உரசும் பனையின்.
சர சர சத்தம்
புயலோடு கொட்டும் மழையின்.ஆ….கா
டிக்.டிக் சத்தம்.
இதமாக காதில் விழ
சுகமான தூக்கம்.
அன்போடு உரையாடி இன்பமாக
வாழ்ந்தோம்..எம் மண்ணில்.
வந்தோம் வந்தோம் இம்
மண்ணில் வந்தோம்.
தெலைத்தோம் அத்தனையும்
தொலைத்தோம்.
மிருகத்தின் நடுவே
மனிதனடா.
அடகருனையே இல்லா
உலகமடா.
வித்தை கற்றுவிட்டு மனம் குணம்
எல்லாம் இன்று நாடகமேடையில்.
பாசம் ஒரு மடமைத்தனமாம்
அதை வேசம் போட்டு
உரைக்கும் மனிதனடா.
சத்தியத்தை மீறி அதில்
பக்தியை மறைத்து
மது போதையில்
சந்தியில் ஆடுதடா.
அன்புடன் கை… கோர்த்து.
பண்புடன் நடந்ததெல்லாம்
சாக்கடையில் போனதடா.
உள்ளத்தில் ஏலு வகை
அட சொல்லுக்கு ஒருவகை.
வார்த்தைகள் அழகானவை
ஆனால் வாதமோ கொடுமை.
பணம் இல்லைஜெனில்
மனம் இல்லையாம்.
ஐயோ…ஒருதலைக்காதல்
எல்லாம் பலகொல்லிக்காதலானது.
எலும்பும் சதைக்கும் நடுவில்
இத்தனைநடகமேனடா……..மனிதா….
No comments:
Post a Comment