Monday, September 19, 2005

வேதனை......


வேதனை......

கொதியாய் கொதிக்குது இதயம்
விதியின் சதியில் மாட்டியதால்
நித்தம் நித்தம் பல கனவு
முத்தம் தருமா ஒரு வசந்தம்

உலவறிந்த பின் உலகை வெறுத்தேன்
பாவம் என்ற கல்லறைக்குள் பலியானேன்
விதி செல்லும் வேகம் தடுக்கஒரு
கருவியை எங்கெங்கே தேட....?

நீண்டதோர் பயணம் கொள்ளபாதை
முழுவதும் முற்களின் கோலங்கள்.
துடிப்புக்கு புரியவில்லை தினம் தினம் ஏக்கங்கள்
நடிப்பக்கு புரியவில்லை நம்பிக்கையின் உருவங்கள்
பகலில் சிரித்து இரவில் விழியோடு...
செல்லும் நீர்தலையனையை குழிப்பாட்ட
தேடல் கொண்டு தேடேன்
இனி தொலைந்து போன வசந்தத்தை.

Friday, September 16, 2005

என் மனைவி..நீ..


என் மனைவி..நீ..

காலமதை இனிமையாக்கி

நேற்ருவரை காத்திருந்து
இனிமைகள் மறைந்து
போனதால்
உன் காதல் கானல்
நீராய் போனதடி..
எமை பிரித்த தூரம்
விலகி..பிரிவை தந்தது
கனவுகள் தீயாய்
எரிகின்றது
நீ..சொன்ன வார்த்தைகள்
என் மனதில் ஆறுதல்
கொண்டது
நீ..பிரிந்து போனதும்
என் கவிதை இழந்து
போனது
புலம்பிப் புலம்பிஎனி
என்ன லாபம்
நகத்துடன் சதையாய்
இனைந்து விட்டோம்
உயிரோடு உயிராய்
கலந்து விட்டோம்
என்றாய்
அப்போது கேட்டிருக்கவேண்டும்
நான்......
தூரம் நம்மை பிரிக்காதா..
என்று
ஏன் பிரிந்தாய் நீ......
ஏன் தவிக்கவிட்டாய்
காதலியே...
இனிமை இல்லைவாழ்வில்
வசந்தம்இல்லை..
கனவு இல்லை
எனக்கு யாரும்
இல்லை
இருவரின் மனதில்
எத்தனை..இடர்பாடுகள்
பரிதாபமாக...விடைகான
துடிக்குது என் மனது.
நீ...என்மனைவியாகும்
வரை.
என்றும் தனிமையாய்
இருப்பேன்..


Monday, September 12, 2005

உன் பார்வைக்குள் நான்

உன் பார்வைக்குள் நான்

உன் பார்வையில் நான்
காதல் தேவதை.
என் இதயப்பார்வையில் நீ....
நல்லகுணமடையான்
உன் மனதில் நான் குடியிருக்க

இப்பிறப்பில் நான் கொண்டுவந்ந கொடை
என நிம்மதி கொண்டேன்.


ராகினி ஜேர்மன்

Saturday, September 10, 2005

விழியே…..பார்ப்பாயா.?


விழியே…..பார்ப்பாயா.



கொஞ்சிய வார்தையால் கெஞ்சிக்கேட்டும்
உன் வார்தை மிஞ்சி எனை மௌனமாக்கியது.
உன் தரிசனத்துக்காய் ஆசைவளர்த்து
வாசலில் காத்திருந்தேன்
ஏன் வார்த்தை தவறியது.
தவறிய வார்தையால்...மனம் துடிக்க விழி நனைய
பாவை மனம் பாவியாய் போனது.
உன் விழி பார்க்குமுன் என் விழி குறுடானால்
சுழலும் உலகே…
ஒரு முறை நின்றுவிடு.
உலகுக்கெல்லாம் ஒரு நிலவு எனக்குள்
நீ…..ஒரு நிலவு.
கொண்ட நினைவு அழிந்து போனதால்.
உணர்ச்சிகள் மட்டும் தள்ளாட....
இதயம் அடங்கி வசந்தமே உதிர்ந்தது.
என் உடல் அழிந்தாழும் உன் பாதம் தொடுவேன்.
அப்போதாவது உன் இதயம் திறக்கட்டும்.
என் நினைவுகளை.

மனிதன்……

மனிதன்……

புயலில் உரசும் பனையின்.
சர சர சத்தம்
புயலோடு கொட்டும் மழையின்.ஆ….கா
டிக்.டிக் சத்தம்.
இதமாக காதில் விழ
சுகமான தூக்கம்.
அன்போடு உரையாடி இன்பமாக
வாழ்ந்தோம்..எம் மண்ணில்.
வந்தோம் வந்தோம் இம்
மண்ணில் வந்தோம்.
தெலைத்தோம் அத்தனையும்
தொலைத்தோம்.
மிருகத்தின் நடுவே
மனிதனடா.
அடகருனையே இல்லா
உலகமடா.
வித்தை கற்றுவிட்டு மனம் குணம்
எல்லாம் இன்று நாடகமேடையில்.
பாசம் ஒரு மடமைத்தனமாம்
அதை வேசம் போட்டு
உரைக்கும் மனிதனடா.
சத்தியத்தை மீறி அதில்
பக்தியை மறைத்து
மது போதையில்
சந்தியில் ஆடுதடா.
அன்புடன் கை… கோர்த்து.
பண்புடன் நடந்ததெல்லாம்
சாக்கடையில் போனதடா.
உள்ளத்தில் ஏலு வகை
அட சொல்லுக்கு ஒருவகை.
வார்த்தைகள் அழகானவை
ஆனால் வாதமோ கொடுமை.
பணம் இல்லைஜெனில்
மனம் இல்லையாம்.
ஐயோ…ஒருதலைக்காதல்
எல்லாம் பலகொல்லிக்காதலானது.
எலும்பும் சதைக்கும் நடுவில்
இத்தனைநடகமேனடா……..மனிதா….

வெற்றி எங்கே.....?

வெற்றி எங்கே.....?

எங்கிருந்து வந்தது
தோல்வி.
உனக்குள் நீ..யே
போட்டதுதான் தோல்வி

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும்
போது
தோல்விப்பாதைக்குள் நீ..
கால் பதிக்கின்றாய்
அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை
மறைக்கின்றது.

தோல்வி...

முடிவுற்றது என
நிமிர்துவிடு
மீண்டும் உனைத் தொடர்ந்தாள்
தொடர்கின்றதே என
முடங்கிடாதே மானிடா....
செதுக்கிய சிற்பம்
அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம்
உளி தவறவில்லையே.

சிரிப்போடு கையில் எடுக்கையில்
துணிவோடு உன் கால்கள்
வெற்றி நடைபோடும்
என்பதை உணர்வாய்.

நீதி கூறும் போது
உனக்கு புரிகின்றதோ
இல்லையோ...
நீ.. போறாடிய அனுபவம்
பேசும் போது
மானிடா என்றும்
வெற்றி மாலை உன்
கையில்.

நிலாவில் என் விழி..........

நிலாவில் என் விழி..........

மழை தரும் முகிலுக்குள்
அற்புதம் கொண்ட நிலவே...
உலகெங்கும் ஒளி வீசி
இதமாக மலர்கின்றாய்.
எனக்குள் நீ........ பந்தமானதால்
உனக்கு நான் பக்தனானேன்
எண்ணங்களை எழுத்தாக்கி
உன் மடியில் சமர்ப்பிக்கின்றேன்
உலகில் நான் இல்லை என்றாலும்
என் எழுத்தில் அழியாத
இரு விழி காண்பாய்..

நான் பசலையாவேன்.

கடல் அலை கரையில்
விளையாட
என் மனம் உன்னோடு

அலைமோத..
கருடப்பார்வையால்

திருடினாய் எனை.

திருடியே ஏன் திருகிக்....

கொல்கின்றாய்

இனிதான தென்றளில்

உன் ராகம் இசை பாட.
தனிமையில் புதுவிதம்

கொள்வேன்.

அன்பு மொழி பேசி

ஆப்பு வைத்தாய்.
என் உயிர் ஊசலாட
நீயோ....ஊஞ்சல்

ஆடுகின்றாய்
தொட்டேன் உன்

திருப்பாதம்
துதித்தேன் உனை
என்நாளும்.

வந்தேன் உன்

திருவடிக்கு
திறவாய் உன்..

மனக்கதவை.
அன்பே..

என் வாழ்வைஒளிச்சுடர்

ஆக்கிவிடு

இல்லையேல்.......உன் வீட்டு

ரோஐhவுக்கு
நான் பசலையாவேன்.

ஏன் பெண்ணே....

ஏன் பெண்ணே....

வாழ்க்கை என்னும் ஓடம்
மாற்றங்களாய்..மாறியபோது.
மௌனத்தின் பார்வை மட்டும்

போதும் என்றேன்.

ஏக்கங்களாக இருந்த விழி

பார்வையால் பார்த்தபோது.
உன் இரு கருவிழியில்

பணப்பேய்நடமாடியது.

ஏங்கினேன் தவித்தேன்

சிலநிமிடம்......
நம்பவில்லையடி உனை.

காரணம் புரியவில்லை.

பாசம் ரோசத்தை மறைத்தது.

வார்த்தைகள் தடுமாறி வாய்

ஊமையானது.

வந்த குடியை கெடுத்து உள்ளங்களை

சிதறடித்தாய்.

உன் முடிவரைக்குள் முகவரியை

மாற்றிவிட்டாய்.

நீ.....போடும் வேஷமோ....
சமுதாயத்தில் சீ.....ர் கெட்ட

வேஷம்

இருள் கொண்ட போர்வைக்குள்

நீ....மட்டும் புகுந்ததால்
உனக்கு மட்டுமே உனை தெரியும்.

போடி.....போ......உனது உருவம்
உருவெடுத்து ஆடுகின்றது

இம்மண்ணில்.

உனது அகந்தை அழிந்து
உனை நீ....யே.. பார்க்கும் போது
தனிமையில் இருப்பாய்.

அப்போது தேடும் உன்

விழி...எங்கே... உறவுகள் என்று.

முகவரியை தரமறுக்கும் பெண்ணே.....
உனக்கிது சமர்ப்பனம்.

என்னவள்


என்னவள்

பொற்கால மேடையில் சேர்ந்த
நம் காதல்
நிலையாகும் என்று அழியாத

ஓவியமாக.....
என்மனதில் பதித்தேன்

அறியாத உன்...மனதை

தொட்டுச்சென்றதால்
உன் இதயம் திறவாமல்

எங்கே சென்றாய்

பொல்லாத பருவத்தை

கல்லாக்கி வைத்தேன்

எனை விட்டு வெகு

தூரம் சென்றவளே

உன் நினைவை சுமந்படி

தினம் குளிக்கின்றேன்
கண்ணீரால்

உன் உருவம் எனை

தட்டிச்செல்ல
ஆறாதறணமாக என் இதையம்

வலிக்கின்றது

என்னுள் புகுந்து என்

சுவாசத்தை அடைத்தாய்

என் பேச்சில் உன்

சத்தம் கேட்கின்றேன்

என் பார்வையில்

உனை கான்கின்றேன்
என்னுள் எல்லாம்

நீயாக வருவதால்
நான் நனாக இல்லையடி
உன் நினைவை சுமக்க

என் உடல் வேண்டும்
கல்லறையில் புகுமுன்

என் அருகில் வந்திடு

- ராகினி

உனக்காக....


உனக்காக....

என் அசைவும் உயிரும்
உனக்காக

நீ...தரை பார்த்து நடந்தால் உன்

முகம் கான ஆவல் கொள்வேன்.

நீ தலை நிமிர்ந்து சென்றால்

உனைபார்க்க ஆசை கொள்வேன்.

உன் கன்னக்குழியில் என் வேர்வைத்துழி

முத்தமிட்டதால்.
ஒரு கனம் சுவாசிக்க மறந்தேன்

கண்ணே.காலம் தடை போட்டாலும்

வேகத்துடன்போறாடுவேன்.

உனை அடைவதற்கு உனக்கு மட்டும்

மனக்கதவை மூடியுள்ளேன்

உன் கரம் என் கதவை தட்டும் போது.

என் மனக்கதவை திறப்பேன்
உன் பாதவிரலில் மிஞ்சி போட.

என் சரித்திரத்தில் நீ....

என் சரித்திரத்தில் நீ....

நமக்குள் வந்த பந்தமிது
எனக்கு என்றும் வரம் கிடைத்த
சொந்தமிது

இருளுக்குள் ஒளி தரும் உறவிது
என் முடிவுக்குள் வந்த முகமிது

உனை நெருங்கவும் முடியவில்லை
உனை விடவும் முடியவில்லை
உன் முகம் மட்டும் போதும் என்றதால்
இவ்வுலகில் எதுவும் பிடிக்கவில்லை

அன்பென்ற கோட்டைக்குள் புகுந்ததாள்....
என்னுயிர் வதைத்து

உன்னுயிர் சுமக்கின்றேன்

புரியாத உலகில் பிரியாதவரம்

ஒன்றைகேட்டுத்தவிக்கின்றேன்.

இல்லையேல்…..உனை ஒருகனம்

பார்த்தால் போதும்
மறு நிமிடம் செத்து மடிந்திடுவேன்.

இதயத்தில் உன் பெயர் மட்டும்

பொறித்ததால்
உனை என் சரித்திர.....

நாயகனாக்கினேன்.

வாரத்தில்.நீ........

வாரத்தில்.நீ........

தீண்டாத திங்கள் நீ.....

செவ்வாயின் செவ்விதழ் நீ......

புகழ் படைத்த புதனும் நீ.........

எனக்கு விரிசல் இல்லா வியாழன் நீ....

வெண்மையுள்ளம் படைத்த வெள்ளி நீ....

எனை சங்கடத்தில் மாட்டிய சனிபகவானும் நீ.......

இருந்தும்எனக்குள் இதமாக உறங்கும்
ஞாயிறும் நீயே.......நீதான்

உன் கையால்..


உன் கையால்..

யன்னல் திறக்கையில்
வீசுது உன் காதல்.

அதில் வாட்டுது உன்

நினைவு.

நினைவை மனதில் வைத்து

என்குள் ஓர் கனவை வளர்த்தேன்

கவிதை ஒன்று தொடுத்து

கடிதமாக வரைந்தேன்.

வீடெல்லாம் விளக்கேற்றி

விடியலுக்காய் காத்திருந்தேன்.

காத்திருந்த கண்ணில்

காணல் நீர்..ஊற்றிவிட்டாய்.

கள்ளமில்லா நெஞ்சை

களவாடிச்சென்று ….
எனைகள்ளடிக்க வைத்து

விட்டாய்.

காத்திருந்த மனதை துடிக்க

வைத்தராட்சசி..... யே...

நொடிப்பொழுதில் கூடுதடி

என் நாடித்துடிப்பு.

வார்த்தைகள் கொட்டிவிட

துடிக்குது மனது.

கள்ளடித்த கால்கள்

தள்ளாடிதடுக்குதடி.

புரியாத புதிராய் புகுந்து

விட்டராட்சசியே...

பித்தனாக்கி எனை செத்தவன்

போல் அலையவைத்தாய்

தொண்டைக்குழி வறண்டு

நாவு புறழுதடி.

என் அன்பே....உன் கையால்

கள்....கஞ்சி தந்தாலும்
கல்..கற்கண்டு போல்

இனிக்குமடி...

நடிப்பு

நடிப்பு.

நடிப்பென்னும் மேடை போட்டு
முடிச்சென்னும் கதை எழுதும்

சமுதாயமே வழி கொடு
இல்லை...வாழவிடு.

வந்ததும் கண்டேன்

ஏமாற்றும் மனிதர்களை.

இரக்கம் கொண்டதால்
பொசிக்கிவிட்டான் நம்பிக்கையை.

தன் காரியத்திற்க்காய் பின் தொடர்ந்தான்

புரியாததால் செயல் இழந்தோம்

விழுந்தான் காலில் முடித்தான்

தன் காரியத்தைகேட்டான்
யார் என்று செய் நன்றி மறந்து.
முகமூடி அணிந்து சென்று
விட்டான்கோட்டையை விட்டு.

என்னடா உலகமிது எழுந்தால்

குமுறுகின்றான்

விழுந்தால் சிரிக்கின்றான்
பணமிருந்தால் ஐயோ....அவன் பேச

மறுக்கின்றான்சபையில்

பந்தாகாட்டிசபையையே

கெடுக்கின்றான்.

நாலுபேருக்கு நடுவில் பணக்காரன் தான் என்று

புலம்புகின்றான்

குடி போதையில் ஐயே பாவம்

தொலைபேசியில் தாயவளின்
குரல்கேட்டு தொல்லை பேசி
எனதெலைபேசியை அடித்து
வைக்கின்றான்.

அட புரியவில்லை நீ தாமரை

இலை என்று.

தெரியவில்லை நீ....ஒரு

மனிதனா என்று.

நட்பு

நட்பு

தேடும் இதயத்தின் சத்தங்கள்

தவிக்கின்ற என் நினைவுகளின் தேடல்கள்

சிரிக்கினறது மனது
வடிக்கின்றதுரத்தக்கண்ணீர்

இனைந்திட்ட வசந்தத்தில் புதுமை கண்டேன்

நீ....பிரிந்திடாதிருக்க வரம் ஒன்று கேட்ப்பேன்

தேடுவது யாரிடம்
கேட்பது யாரிடம்
நட்பை கொடுத்தது உன்னிடம்

திருமண பந்தத்தை விட
இந்தநட்பென்ற வார்தை புனிதமானது

அன்போடு உனை பார்த்தேன்
நான்தேடிய வார்த்தைக்குள் உன் முகம் கண்டேன்

ஏனை பிடிக்காதபோதும் பிடிவாதம் கொண்டேன்.

வயதே என்னாத நட்பைதந்தேன்

புரியாதபுதிராக சீறி எழுந்தாய்
கண்ணீர்வழியாக உன் முகவரி பார்த்தேன்

தந்தைஇல்லா உலகில் என்தாயும் மறைந்தாள்

இருவரின் முகத்தை உன் ஒரு முகத்தில்கண்டேன்

தீயோடு நான் கருகியபோதும்
என்தன் நட்பு மட்டும் கருகாமல் உனைச்சேரும்.

மரணத்தின் அர்த்தம்

மரணத்தின் அர்த்தம்

நீ பிறந்ததால் பூவும் மலர்ந்தது

நீ.. பாடியதால் குயில் பாடமறுத்தது

உன் சுவாசத்தை சுவாசிக்கும் போது
நான் என் சுவாசத்தை மறந்தேன்

உன் பேச்சில் என் கவிதை மலர்ந்தது

எது இவ்வுளகில் அர்த்தம்

என் வாழ்வில் உனைச்சுமந்தசெல்வதுதான்
என் மரணத்தின் அர்த்தம்

எங்கே....மனித நேயம்


எங்கே....மனித நேயம்

சுழன்றிடும் பூமியில்
மனிதனே எங்கே... உன் மனித நேயம்

அதர்மம் கொண்டு உலகை ஆட்டிவைத்து
மனித நேயத்தை தொலைத்து விட்டாயே.....

தர்மம் தொலைந்ததால் நிஐhயங்கள் அழிந்தன.

அறிவில்லா சிந்னைக்குள் முகம் புதைத்து
இதில் பாதையில் சிங்கார நடை.

ஊமை நெஞ்சம் உறுத்தும் போதாவது
உண்மை வழி பிறக்காதா...?

மனதில் மர்ம ஆட்டம்
இதில்வெளியில் திருமுகம்.

சந்தைக்கூட்டத்தில் வந்த மந்தை பொல்
பண்பாட்டை புதைத்து பகையை வளர்க்குதடா.

செந்தூர சொந்தம் எல்லாம் சாக்கடையானது

உறவெண்று சொல்லி உருக்குலைத்துவிட்டது

அகந்தையின் பெயரால்
வீழ்ச்சி செய்யும் மனிதனைநினைக்கையில்
உள்ளம் கோதுதடா.

நீதி எங்கே..கருணை எங்கே...நேர்மை எங்கே..

கடமை எங்கே...காதல் எங்கே....பண்பு எங்கே...பாசம் எங்கே...

போதும் மனிதா...ஆடாதே..மனிதா ஆடாதே..

மனிதநேயத்தை தொலைக்காதே...

தாய்

தாய்

தனை மறந்து உனை சுமந்தாள்

மறு பிறவிதான் கண்டு உனை எடுத்தாள்

மழலையால் நீ.... தவழ
தன் ரத்தத்தை பாலாக்கினாள்.

இரவுகலை பகலாக்கி
முத்துப்போல் வளர்த்தெடுத்தாள்.

தாய் வேறு சேய் வேறு ஆனாலும்
தன் உயிர் நாள் எல்லாம் சுமந்திருப்பாள்.

உன் மனம் மாறினாலும்
என்றும் தாய்மனம் மாறாது

.நீ…..யும் தாயானாள்........ அப்போ…… புரியும்
தாய்ப்பாசம்.

என்னை தொட்ட காற்று

என்னை தொட்ட காற்று


நெஞ்சைத் தொட்ட காற்றே
வீச மறுத்தது ஏனோ.

.ஒரு கணம் உனை தந்தை போல் பார்ப்பேன்

மறு கணம் உனை நண்பனாக்குவேன்

உன் பாசத்தை மட்டும் பரிசாய்க் கேட்டேன்

ஊருக்குப் பயந்து நீ.. ஊமையானாய்

நல் வாழ்த்தும் கூறவில்லை
நலம் பெறவும் பிரார்த்தனை இல்லை

என் தோழி எடுத்துரைத்தும்
உன் செவி கேட்கவில்லை

அறியாத போதும் தந்தையாய் நீ இருந்து
நான்கு போர் சுமக்கையில்
ஒரு பக்கம் சுமந்திடு

இதமான ராகங்கள்


இதமான ராகங்கள்

என் முன் தெரிகின்ற வான் முழுதும்
உன் குரல் கேட்கின்றது

நிலவினிலே பனித்துளிகள் சொட்டுப்போட
ஒரு துளியில் உன் இருவிழி கண்டேன்

கடல் அலைகள் உலகெங்கும் சத்தமிட
ஒருங்கமைந்த ஓசையில்
சங்கமித்ததுஉன் குரல்

என் இயல்பை நான் பாடுகின்றேன்

இதோ....இந்த நிலாவில் வாழைக்குருத்தில்
மழைத்துளியின்இதமான சத்தம் போல்
சுகமான ராகங்கள் எனைத்தாலட்டுகின்றன

வெள்ளி நிலவே முகம் காட்டு


வெள்ளி நிலவே முகம் காட்டு

வீசும் தென்றலே நான் சேர
வழி சொல்லு

உனைத்தேடுகின்றது விழிகள்

சில நிமிடம் தடைபோடுது உள்ளம்

வஞ்சமில்லா நெஞ்சு ஊமை

மொழிபேச வைத்தாய்

என் கண்கள் தடைஇன்றி

நீர் பெருகின்றது

இறைவணிடம் உயிரைக்கொடுக்க

முயன்றேன்

மறுகணம் உன் உயிருடன்

கலக்க ஏங்குகின்றேன்

உன் இதழின் அழகை சிரிப்பில்

கண்டேன்

உன் பெயரை ஏட்டினில்

எழுதியதாள்.....
விழிகள் மூட மறுக்கின்றது

உன் நினைவு பசியை

மறைக்கின்றது

ஓடும் நதியல் உன் முகம்

பார்த்தேன்

அள்ளிப்பருகையில் நீ.....தவறியது

ஏனோ.....?

உனை இதயத்தில் சுமந்ததால்
நான் வறண்டகுளத்தில்

வாடியதாமரைஆனேன்

நீ பக்கம் வந்தால் போதும்...

உனக்கு நான் செந்தாமரையாவேன்...

----- ----- ------

தொடுப்புகள் [ LINKS ]
---------------------------

யாழ் கவி

தமிழ் மணம்

இலங்கை வானொலி நினைவலைகள்

நிலா எப்.எம்





Friday, September 09, 2005

தாயின் மௌனம்...

தாயின் மௌனம்...

வாழ்க்கை என்னும் ஓடத்தில்
எத்தனை மாற்றங்கள்

பாசத்தில் ஆனந்தம்.
பார்வையில் பாதாளம்.

சொந்தம் என்றாள் என்னவெண்றான்.
ஒருகனம் திக்கெண்றது.
மறுகனம் மௌனமானது

.வந்தவள் வசமாக்கினாள்
பெற்றவள் தடுமாறினாள்

கொண்டவள் வார்த்தையால்

பாசக்கூடும் உடைந்தது

புகுந்த இடத்தை நசுக்கிவிட்டு

பிறந்த இடத்தை வழமாக்கினாள்.

மகனை பெற்றவள் பட்டினியால்

பரிதவித்தாள்.

தான் என்ற அகந்தை அவள்

மனதில் ஆடியதால்
பாசத்தின் உணர்வை அவள்....

கான மறுத்தாள்.

ஆட்டிவைத்தவளின் கையில்

ஆடுபவன் உறங்கிவிட்டான்.

புலம் பெயர்ந்ததால் உலகை

மறந்து விட்டாய்.

அரக்கத்தனம் படைத்த உன் இதயத்தை..
.ஒரு கனம் அன்பால் நிறப்பிவிடு.

இல்லை.ஒடுங்கிவிடு.

வெறித்தனம் கொண்டு

ஆட்டிவைக்காதே.

உறவெண்ற பாசத்தில் நீ......இறங்கிவிடு.
உன் இதயம் மலர்வாய்.

அப்போதாவது உன் இதயம் திறக்கட்டும்

கொஞ்சிய வார்தையால்
கெஞ்சிக்கேட்டும்
உன் வார்தை மிஞ்சி எனை

மௌனமாக்கியது.

உன் தரிசனத்துக்காய் ஆசைவளர்த்து
வாசலில் காத்திருந்தேன்.
ஏன் வார்த்தை தவறியது.

தவறிய வார்தையால்மனம் துடிக்க
விழி நனைய பாவை மனம்

பாவியாய் போனது.

உன் விழி பார்க்குமுன்

என் விழி குறுடானால்
சுழலும் உலகே…ஒரு

முறை நின்றுவிடு.

உலகுக்கெல்லாம் ஒரு நிலவு
எனக்குள் நீ…..ஒரு நிலவு.

கொண்ட நினைவு அழிந்து

போனதால்
.உணர்ச்சிகள் மட்டும்

தள்ளாட....
இதயம் அடங்கி வசந்தமே

உதிர்ந்தது.

என் உடல் அழிந்தாழும்

உன் பாதம் தொடுவேன்.

அப்போதாவது உன் இதயம் தி

றக்கட்டும்.என் நினைவுகளை.

மீண்டும் உனையே என்நாயகனாக்குவேன்.

நாயகன்

உன்னை அறிந்தேன் என்னைத் தந்தேன்

கண்கள் திறந்தேன்

மங்காத உன்உருவம்
சிங்காரரூபம் கொண்டு என் முன்வந்ததால்
உலகை மறந்து உனை நாயகனாக்கினேன்.

சங்கமப்பாதையில் கால்பதித்ததால்
எனை குங்குமச்சிமிழாக்கினாய்

எனக்கு நீ..நிரந்தரமாகி
இன்ப ஊற்றாகஉறவை வளர்து
உயிரைக்கொடுத்தாய்

தேடியபார்வை தேனாக வந்ததாள்....
உயிருக்குள் உயிராக உனை அடைத்தேன்

இமையாக நீ....இருக்க என் கண்ணுக்கு பயமேது

காலமுலுவதும் உன்னுள் வாழ்ந்து பூவோடுசென்றாலும்

மீண்டும் உனையே என்நாயகனாக்குவேன்.

மனிதா….

புயலில் உரசும்
பனையின்.சர சர சத்தம்

புயலோடு கொட்டும் மழையின்.

ஆ….கா டிக்.டிக் சத்தம்.

இதமாக காதில் விழ சுகமான தூக்கம்.

அன்போடு உரையாடி
இன்பமாக வாழ்ந்தோம்எம் மண்ணில்.

வந்தோம் வந்தோம் இம்மண்ணில் வந்தோம்.

தெலைத்தோம் அத்தனையும் தொலைத்தோம்.

மிருகத்தின் நடுவே மனிதனடா.

அடகருனையே இல்லா உலகமடா.

வித்தை கற்றுவிட்டு
மனம் குணம் எல்லாம் இன்று நாடகமேடையில்.

பாசம் ஒரு மடமைத்தனமாம்
அதை வேசம் போட்டு உரைக்கும் மனிதனடா

.சத்தியத்தை மீறி அதில் பக்தியை மறைத்து
மது போதையில் சந்தியில் ஆடுதடா.

அன்புடன் கை… கோர்த்து.பண்புடன் நடந்ததெல்லாம்
சாக்கடையில் போனதடா.

உள்ளத்தில் ஏலு வகை அட சொல்லுக்கு ஒருவகை.
வார்த்தைகள் அழகானவை
ஆனால் வாதமோ கொடுமை.

பணம் இல்லைஜெனில் மனம் இல்லையாம்.

ஐயோ…ஒருதலைக்காதல் எல்லாம்
பலகொல்லிக்காதலானது.

எலும்பும் சதைக்கும் நடுவில் இத்தனைநடகமேனடா……..மனிதா….

எங்கிருந்து வந்தது தோல்வி

எங்கிருந்து வந்தது தோல்வி

உனக்குள் நீ..யே போட்டதுதான்
தோல்வி

மனம் என்ற கடலுக்குள்
வேதனைக்கப்பல் மூழ்கும் போது
தோல்விப்பாதைக்குள் நீ..கால் பதிக்கின்றாய்

அத்தோல்வியே உனக்கு
வெற்றியின் ஒளியை மறைக்கின்றது

முடிவுற்றது என நிமிர்துவிடு

மீண்டும் உனைத் தொடர்ந்தாள்...
தொடர்கின்றதே என முடங்கிடாதே

மானிடாசெதுக்கிய சிற்பம் அழிந்ததே தவிர
உன்கையில் இருக்கம் உளி தவறவில்லையே

சிரிப்போடு கையில் எடுக்கையில்
துணிவோடு உன் கால்கள் வெற்றி நடைபோடும்

நீதி கூறும் போது உனக்கு புரிகின்றதோ இல்லையோ
நீ போறாடிய அனுபவம் பேசும் போது
மானிடா என்றும் வெற்றி மாலை உன்கையில்....

பொறாமை

தனிமையில் சென்ற மனிதன்
காற்றை தீண்டியதால் ஏற்ப்பட்ட வலி

மனதில் விசம் வைத்து
நல்லவன் போல் நடித்த மனிதன்
இதமாக வீசிய தெண்றலை
தீண்டிப்பார்த்தான்

காற்ரே உன் திறமையைக்காட்டுஎன மனிதன் கேடக்க
காற்றும் நிதானத்துடன் வலம் வந்தது

போறாமை கொண்ட மனிதன்
காற்றை தீண்டிப்பார்த்தான்
காற்றும் பொறுமையாக இருந்தது

விசம் கொண்ட மனிதனும் விட்டதில்லை
தொடர்ந்து தீண்டிக்கொண்டேஇருந்தான்

காற்று தன் பொறுமை இலந்து
புயலாக மாறி
மனிதனை தூக்கிவீசியது

மனிதன் நடுச்சந்தியில் முடமையானான்

புயல் ஓய்ந்து இதமான தெண்றலாகவீசுகின்றது

துடிக்கும் இதயம்



துடிக்கும் இதயத்துள்
துள்ளிய மானே

நீ....... தள்ளித் தள்ளி நழுவியதேனோ

உன் குரலுக்கு ராகமாக எனை ஏற்றினாய்

இப்போ..... என் ரத்த ஓட்டத்தை நிறுத்திவிட்டாய்

உடல் தளர்ந்து நாடித்துடிப்பு குறைந்து
உடைந்த பேனாவில் இருந்து சிந்தும்மைத்துளிபோல்
என் கண்ணீரால் விழியில் இட்ட மைகரைகின்றது

உன்னை நினைத்தாலே
இனிக்கும் இதயத்திற்க்கு
உன் கையால் கடசிப் பால் வார்த்துவிடு

உனக்காக இளமையோடு காத்திருப்பேன்

மாலைப் பொழுதில்
கதிரவன் கடலுக்குள் மூழ்கும் போது
அவள் பாதங்களுடன் கடல் அலைகள் விளையாட
பாதங்களில் இருந்த கொலுசு சத்தமிட்டன

அந்த இனிமையான சத்தத்தில்
என் மனதில் ஒளி வட்டம் தோண்றியது

பெண்ணே
வாடிய பூவுக்குள் ஒரு வசந்தமேஉருவாக்கினாய்

இதமாக இதயத்தில் புகுந்து
இனிமையான மொழிகள் பேசி
குளிர்ச்சியான அன்பை தந்து
என் இதயத்தை வளர்ச்சி அடையவைத்தாய்

என்னை நானும் மறந்து
இன்பத்தில் அன்ன நடை பயின்றேன்

நிறைந்திட்ட அன்பை தந்து
இறுதியில் நீ..... மாறியதேனோ

இதயமான உதய நிலவே
உனக்காக இளமையோடு...
உன் பாதம்காணும் வரை
காத்திருப்பேன்......

வேண்டும்


கிண்டல் இல்லா
அன்பு வேண்டும்

வம்பு இல்லா
வசந்தம் வேண்டும்

தொல்லை இல்லா
சொந்தம் வேண்டும்

வெள்ளைத்தால் கொண்ட
இதயம் வேண்டும்

கொடுமை இல்லா
வார்த்தை வேண்டும்

வஞ்சகம் இல்லா
மனிதன் வேண்டும்

கருனை காட்டும்
கடவுள் வேண்டும்

நோய் இல்லா
உடல் வேண்டும்

மாறியது

பிறந்ததும்
கள்ளப் பயல் என்றாய்

பள்ளிப் பருவத்தில்
உருப்படாத கழுதை என்றாய்

காதல் பருவத்தில்
சோம் போறி மாடு என்றாய்

ஆனால்...
உன்னை திருமணம் செய்ததும்
மனிதன் என்றாய்

மனிதனின் மறு பக்கம்

நீ நாகமா......

இல்லை நாரையா....

கொடுப்பவனா இல்லை குடி கெடுப்பவனா...

வம்சா வழியா இல்லைஅகிம்சை வழியா...

திருந்தியவனா இல்லை நீ..திருடனா..

உன் வாய்க்குள் வைரஸ்சாஇல்லை தேனா.....

குடும்பத்தை காப்பவனாஇல்லை கூட்டிக் கொடுப்பவனா.....

படித்தவனா இல்லை படிக்காத முட்டாளா..

வீட்டுப் படி ஏறியவனா
இல்லைபடிகளை மடியாக்கியவனா...

.நம்பியவனா இல்லை
நம்பிக்கை துரோகியா....

பாதையில் பாதகனாகி
முட்களைத் தூவியவனே

கொடியவனே கொடூரமானவனே

கொடூரமான வார்த்தையால்
தேள் போல் கொட்டியவனே

உன் வார்த்தைகள்
என் இதயத்தை கிழித்துவிட்ட போது

ஆறாத றணமாயின

நீ….நீஅழியும்வரை நான் உறங்கேன்

மருந்தாக வருவாயா

மனதுக்குள் புகுந்து
கலவரம் செய்பவளே
யார் நீ...

நீ யார் என்று தெரியாத போதும்
தினம் வதைக்கும் ராட்சசியா....?

இல்லை நீ மோகினியா

உன்னால் நோயாக மாறினேன்
நீ மருந்தாக வருவாயா

உன் இரு கருவிழி மட்டும்பார்த்தேன்

நீ......ஆகாயத்தின் முழு மதியா

பூமியில் வந்த வான்மதியா

உன்னருகில் எனை இழுத்து
எனை பித்தனாக்கி விட்டாய்

என் மனக் கோயிலில் நீதேவதையானாய்

காற்றுக்கு என் பெயர் இனிக்கின்றது

இந்த நிலவுக்கு என் பெயர் பிடிக்கவில்லையே

முகவரி இல்லா முகமே

எனை ஆட்டிப்படைப்பவள்நீ யார்.....?

எங்கே...

வசித்த நாடு எங்கே...

விரித்த பாய் எங்கே..

தெலைந்த வசந்தம் எங்கே..

துடிப்பான ரத்தம் எங்கே.

.தேடிய சொந்தம் எங்கே..

தொலைந்து போன சொர்க்கம் எங்கே.

.இதமான நட்பு எங்கே..

அன்புள்ள இதயம் எங்கே..

இனிமை தந்த குரல் எங்கே..

வசந்தம் தந்த பாடல் எங்கே.

.இப்போ….நீ…..தான் எங்கே....?

என்றும் உன்னுடன் நான்....


ஏன் அழைத்தாய் எனை

ஏன் பறித்தாய் மனதை

பூமி எங்கும் பூத்தூவ
பூமகளாய் வந்தாய்

பூ.....வாக தூங்கிய விழியின் தூக்கத்தை
திருடினாய். பெண்ணே....

இதமான இரவை பகல் போல்விழித்திருந்து
நீ...தூக்கம் கொள்ளும் வரை
என் விழிதூங்க மறுக்கின்றது

நீ... கவிதையா.. இல்லை காவியமா..

நரி இல்லை நீ எனக்கு

நாயகி...நாகமில்லை நீ.. எனக்கு

நாதமானவள்வேதமானவளும்.

போர் செய்யும் வாழ்க்கைக்குள்
போர்வையாக நான் வருவேன்

போர் தொடுக்க வில்லை
போர் தடுக்க..

.உன் வாழ்க்கையில் இன்ப ஒளியாக்க

உன் பாதையில் பூவாக மலர்வேன்


வாழ்க்கை ஆயிரம் அர்த்தம் சொல்லும்

நீ... அழிக்க முடியாத ஏட்டில்
அர்த்தமாக வாழ வேண்டும்

வானம் பூத்தூவ....
தேவதைகள் ஆசீர்வதிக்க

உன் மனச்சாந்தியுடன் இன்பமாக வாழ
எங்கிருந்தோ... நீ....அழைத்தாய்

இன்பமாக என்றும் உன்னுடன் நான்....

புது மனிதனாகிவிடு...

புது மனிதனாகிவிடு...

வாழ்கையை என்னி
நாட்களில் பூரிப்படை

கலங்கி நிற்க்கும் இதயத்தில்புன்னகை துளி போடும்


துக்கம் யாவையும் தூக்கி எறிந்துவிடு

பச்சைப் புல்லில்
இன்பப் பாதங்களைபதித்து விடு

நன்மைகளை மீட்டிக் கொள்
விழிகளில்மின்மினிகள் வட்டமிடும்

புதிய உடைபோல்
புது மனிதனாய்பிறந்துவிடு

பிளவுண்ட மலையும் உன் புகழ்பாடும்....

------- ----- -------

LINKS
---------
யாழ் கவி