
கலவரம் செய்பவளே
யார் நீ...
நீ யார் என்று தெரியாத போதும்
தினம் வதைக்கும் ராட்சசியா....?
இல்லை நீ மோகினியா
உன்னால் நோயாக மாறினேன்
நீ மருந்தாக வருவாயா
உன் இரு கருவிழி மட்டும்பார்த்தேன்
நீ......ஆகாயத்தின் முழு மதியா
பூமியில் வந்த வான்மதியா
உன்னருகில் எனை இழுத்து
எனை பித்தனாக்கி விட்டாய்
என் மனக் கோயிலில் நீதேவதையானாய்
காற்றுக்கு என் பெயர் இனிக்கின்றது
இந்த நிலவுக்கு என் பெயர் பிடிக்கவில்லையே
முகவரி இல்லா முகமே
எனை ஆட்டிப்படைப்பவள்நீ யார்.....?
2 comments:
nalla irukku unga kavithai
nanri ungkal varukaikku
Post a Comment