Saturday, September 10, 2005

விழியே…..பார்ப்பாயா.?


விழியே…..பார்ப்பாயா.



கொஞ்சிய வார்தையால் கெஞ்சிக்கேட்டும்
உன் வார்தை மிஞ்சி எனை மௌனமாக்கியது.
உன் தரிசனத்துக்காய் ஆசைவளர்த்து
வாசலில் காத்திருந்தேன்
ஏன் வார்த்தை தவறியது.
தவறிய வார்தையால்...மனம் துடிக்க விழி நனைய
பாவை மனம் பாவியாய் போனது.
உன் விழி பார்க்குமுன் என் விழி குறுடானால்
சுழலும் உலகே…
ஒரு முறை நின்றுவிடு.
உலகுக்கெல்லாம் ஒரு நிலவு எனக்குள்
நீ…..ஒரு நிலவு.
கொண்ட நினைவு அழிந்து போனதால்.
உணர்ச்சிகள் மட்டும் தள்ளாட....
இதயம் அடங்கி வசந்தமே உதிர்ந்தது.
என் உடல் அழிந்தாழும் உன் பாதம் தொடுவேன்.
அப்போதாவது உன் இதயம் திறக்கட்டும்.
என் நினைவுகளை.

2 comments:

rahini said...

நீங்கள் கவிதைக்குயில் தான் என்பதில் சந்தேகமில்லை.
கவிதைக்காட்டில் குயிலின் கவிதை கேட்க வந்த என் காதுகள் (கவிதைவேடன்கள்) கொண்டுவந்த கவிதை என் புரிதலுக்கு கொண்டுவந்தால் பாராடி மகிழ்வேன்.

வாழ்க நீங்கள்
வாழ்க உங்கள் கவிதைகள்.

நெஞ்சார்ந்த பாசமுடன்
என் சுரேஷ்

rahini said...

nanrikal pála