
வாழ்க்கை என்னும் ஓடம்
மாற்றங்களாய்..மாறியபோது.
மௌனத்தின் பார்வை மட்டும்
போதும் என்றேன்.
ஏக்கங்களாக இருந்த விழி
பார்வையால் பார்த்தபோது.
உன் இரு கருவிழியில்
பணப்பேய்நடமாடியது.
ஏங்கினேன் தவித்தேன்
சிலநிமிடம்......
நம்பவில்லையடி உனை.
காரணம் புரியவில்லை.
பாசம் ரோசத்தை மறைத்தது.
வார்த்தைகள் தடுமாறி வாய்
ஊமையானது.
வந்த குடியை கெடுத்து உள்ளங்களை
சிதறடித்தாய்.
உன் முடிவரைக்குள் முகவரியை
மாற்றிவிட்டாய்.
நீ.....போடும் வேஷமோ....
சமுதாயத்தில் சீ.....ர் கெட்ட
வேஷம்
இருள் கொண்ட போர்வைக்குள்
நீ....மட்டும் புகுந்ததால்
உனக்கு மட்டுமே உனை தெரியும்.
போடி.....போ......உனது உருவம்
உருவெடுத்து ஆடுகின்றது
இம்மண்ணில்.
உனது அகந்தை அழிந்து
உனை நீ....யே.. பார்க்கும் போது
தனிமையில் இருப்பாய்.
அப்போது தேடும் உன்
விழி...எங்கே... உறவுகள் என்று.
முகவரியை தரமறுக்கும் பெண்ணே.....
உனக்கிது சமர்ப்பனம்.
No comments:
Post a Comment